Tuesday 7 May 2013

உள்ளூர் வெங்காய உற்பத்திக்கு தீங்கு விளைவிக்கும் விதைகள் கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்டடன.

உள்ளூர் வெங்காய உற்பத்திக்கு தீங்கு விளைவிக்கும் விதைகள் கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்டடன.
By Kapila

2013-04-20 16:31:12

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்திவரப்பட்ட தரத்தில் குறைந்த பெரிய வெங்காய விதைத் தொகையொன்று கட்டுநாயக்கவில் வைத்து கைப்பற்றப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியப் பிரஜைகள் மூவரால் இவ்விதைகள் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டதாகவும்  இவை இலங்கையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் வெங்காய வகைக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கக்கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் இருந்து இலங்கையை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் எயார் யு.எல் 126 என்ற விமானத்தின் மூலமே இவ் விதைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 195 கிலோ விதைகள் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 8 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித முன் அனுமதியோ, சான்றிதழ்களோ இன்றி அவை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கடத்திக் கொண்டு வந்த இந்தியப் பிரஜைகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...