Monday 7 October 2013

அரங்கேறியது சம்பந்தனின் சதி!



ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

[ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 04:13.08 AM GMT ]

வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரச தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.அஸ்வர், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.


சத்தியப்பிரமாண வைபவம் நிறைவடைந்ததும் வடமாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மரத்தினால் செய்யப்பட்ட அழகிய பிள்ளையார் சிலை ஒன்றினை அன்புப் பரிசாக வழங்கியுள்ளார்.

- See more at: http://news.lankawin.com/show-RUmrzATbMXes1.html#sthash.QxHdPVkL.dpuf
=======================================================

சீ.வி விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை

[ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 08:41.52 AM GMT ]

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிபட்டுள்ளார்.

ஊடக அறிக்கை பின்வருமாறு:

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன்.

என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.

போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான கிட்டிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும்.

சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கு வன்முறைக்கு இடமில்லை. வலோத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக,

 இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!

நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் 
முதலமைச்சர் 
வடமாகாணசபை

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...