Tuesday 26 November 2013

ஜெயா அரசின் பண்பாட்டுப் படுகொலை! செங்கல்ப்பட்டு சிறைமுகாமில் மாவீரர் தினத்துக்கு தடை!!

செங்கல்பட்டு சிறைமுகாமில் மாவீரர் தின அலங்காரங்கள் கிழிப்பு! மாவீரர் நினைவு மண்டபம் கடற்பாரை கொண்டு தகர்ப்பு!

பிரமாண்டம்: செங்கல்ப்பட்டு கைதிகள், 
சிறைமுகாமுக்குள் கட்டியெழுப்பிய மாவீரர் நினைவு மண்டபம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை. சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை!  

Top News [Tuesday, 2013-11-26 22:31:07]

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த சொந்தங்களை நினைவு கூர்வது வழக்கம். அதற்காக அவர்கள் சிறப்பு முகாமில் உள்ளேயே நினைவு சின்னம் அமைத்து நவம்பர் 27 நாளில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவர். அணி அணியாக விளக்குகள் வைத்து மாவீரர்களுக்கு சுடர் வணக்கம், மலர் வணக்கம் செய்து வந்தனர். மஞ்சள் சிகப்பு வண்ண தோரணங்களை நினைவு சின்னம் சுற்றிலும் கட்டியிருந்தனர் . சென்ற ஆண்டும் மாவீரர் நாளை
சிறப்பு முகாமில் இருந்த அனைவரும் அனுசரித்தனர். இதனால் யாருக்கும் இடையூறு இல்லை. காரணம் இது அவர்கள் தனிப்பட்ட நிகழ்வாகவே அனுசரித்து வந்தனர் .

அச்சம்: அலங்கார வண்ணக் கொடிக்கம்பத்தை பிடுங்கி 
செம்மஞ்சள் கொடிகளைக் கிழித்தெறியும் அரச படை

இந்நிலையில், மாவீரர் நாளை அனுசரிக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில் , இன்று தமிழக காவல்துறை மாவீரர் நாளை அனுசரிக்க தடை விதித்தது. இறந்த உறவுகளுக்கு முகாமில் அஞ்சலி செலுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது . அதை தொடர்ந்து மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரடியாக இடிக்கத் தொடங்கியது . இதை பார்த்த ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர். ஆனால் எதையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாத தமிழக காவல்துறை , மாவீரர் நாளுக்காக அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கொடிக் கம்பங்களை இடித்து அகற்றியது. தோரணங்களை கிழித்து எறிந்தது.இறந்த சொந்தகளுக்கு கூட அஞ்சலி செலுத்த இந்த அரசு தடை விதித்துள்ளதை முகாம் வாசிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

நீசத்தனம்: சிறைக்கைதிகள் கட்டியெழுப்பிய நினைவு மண்டபம் தகர்ப்பு

காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து நாளை 45 ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாம் தமிழர்: மாவீரர் நடுகல்லை தகர்க்கும் முயற்சி

தமிழக அரசு இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுசரிக்கப்படும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்து வருகிறது . முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுப் புற சுவரை அண்மையில் தமிழக அரசு இடித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடற்பாரைத் தாக்குதல்: காக்கிச் சட்டைக் காலடியில் கற்சிலை!
நன்றி: செய்தி புகைப்படங்கள் http://www.seithy.com/briefTopNews.php?newsID=97747&category=TopNews&language=tamil 
தலைப்பு புகைப்படக் குறிப்புகள் ENB

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...