Monday 10 March 2014

, “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை! மாவை சம்பந்தன்

 “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம்  இருந்ததில்லை``

மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும், தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில், “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் வாழும், தேசபக்தி மிக்க இலங்கையர் நாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை இலங்கை உயர்நீதிமன்றம்,
வரும் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மிகவும் சுவாரசியமான வழக்கு இது.

“இந்த இரு தமிழ் கட்சிகளின் இலக்கு, இலங்கையில் ஈழம் என்ற பெயரில்
தனிநாடு அமைப்பது என்பதை நீதிமன்றம் பிரகடனம் செய்ய வேண்டும்” என,
ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. “அப்படி ஈழம் அமைக்கும்
நோக்கமே எமக்கு கிடையாது” என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மற்றும் தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இனி விசாரணையின்போது, இவர்களுக்கு ஈழம் வேண்டுமா, இல்லையா என்பது முடிவு செய்யப்பட வேண்டும்.

இலங்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், மற்றும்
நீதிபதிகள் சந்திரா ஏக்கநாயக்க, பீ.பி அலுவிஹார ஆகியோர் முன்னிலையில்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய
கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில், முதலில் கூறப்பட்ட இருவரும், ஈழம் அமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளவர்கள் எனவும், அப்படி ஒரு நோக்கம் அவர்களுக்கு உள்ளது என்று தெரிந்தும், அவர்களது கட்சிகளை தேர்தல்களில் போட்டியிட அனுமதித்தது தவறு என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீதும், 5 மனுக்களிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும், தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில், “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் வாழும், தேசபக்தி மிக்க இலங்கையர் நாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை, வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான செய்திகளை அதிகம் வெளியிடாமல் அடக்கி
வாசிக்கும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மீடியாக்களுக்கு
சொல்லப்பட்டுள்ளது. “எமக்கு வேண்டாம் ஈழம்” என்று இவர்கள் வாதாடுவதால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் புலம்பெயர் தமிழர் நிதி வசூல்கள் பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://tamil.north-lanka.com/2014/01/23/60123/

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...