Monday 10 March 2014

இலங்கை இராணுவப் பயிற்சி தொடரும்: மேனன் உறுதி

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடரும்; கோட்டாவிடம் 
மேனன் உறுதி

வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014 11:18 0 COMMENTS

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகள்
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று புதுடில்லிக்கான விஜயத்தை
மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி
பாதுகாப்பின் ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர்
முகம்மது நஜீம், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ
ஆகியோர் கலந்து கொண்டனர். மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளின்
பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய
நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தல்,
தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும்
பயிற்சிகள் தொடரும் என சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. (நக்கீரன்) 

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...