Saturday 24 May 2014

`மோடிக்கு அமோக வெற்றி` என்கிற ஊடக மோசடி!




நடந்து முடிந்த இந்தியாவின் 16வது மைய அதிகாரத்துக்கான லோக் சபா பொதுத் தேர்தலில் பாசிச மோடியின்  பா.ஜ.க.கட்சி அமோக வெற்றிபெற்று,
தனிப்பெரும்பான்மை கொண்டு அரசாங்கம்-ஆட்சி அமைக்க இந்திய ஜனநாயகம் முடிவு செய்து விட்டதாக ஒரு ஊடகப் புனைவும், பொய்யும், புரட்டும்,மோசடியும் உலக மக்களின் கண்களை மூடி மறைத்து வருகின்றது.

இந்திய தேர்தல் திணைக்கள இணைய தளம், 2014 பொதுத் தேர்தல் குறித்து வெளியிட்ட புள்ளிவிபரங்கள் வருமாறு.

வாக்களித்தோர் விகிதாசாரம் 75%, அதாவது 25% வாக்குரிமை பெற்ற இந்தியக்குடிமக்கள் வாக்களிக்கவில்லை.

வாக்களித்தோரில் பா.ஜ.க.31% மும், காங்கிரஸ் 19%மும் பெற்றன. ஆக மொத்தம் இந்த இரு பெரும் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆக 50 % தான்.

ஆக 75% வீத இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே பா.ஜ.க வும்.காங்கிரசும்.

இவர்களுக்கு தேசியக் கட்சி என்று உரிமை கொண்டாட எந்த யோக்கியதையும் கிடையாது.

இதனால் இந்த தேர்தலை காங்கிரஸ் மீது மோடி கொண்ட வெற்றியாகக் கொள்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.

மாறாக, அதிக பட்சம் இரண்டு கட்சிகளையும் பெரும்பான்மை இந்திய வாக்காளர் நிராகரித்த தேர்தல் என்றே கொள்ள முடியும்.

மேலும் 19% வாக்குப்பெற்ற காங்கிரஸ் 44 பன்றி இருக்கைகளைப் பெற்றிருக்கின்றது, தோராயமாக இதனை 1% வாக்குக்கு 2 இருக்கைகள் என எடுத்துக்கொள்ளலாம்.அப்படியாயின் 31% வாக்குப்பெற்ற பா.ஜ.க.அதிகபட்சம் 65 இருக்கைகளையே பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பா.ஜ.க.பெற்றதோ 282!!
இந்த 31% வாக்குகளின் மொத்தத் தொகை 171657549 (பதினேழேகால் கோடியாகும்). 19% காங்கிரஸ் வாக்குகள் 106938242 (பத்தரைக்கோடியாகும்). வாக்கு வேறு பாடு 64719307 (ஆறரைக் கோடியாகும்.)  பா.ஜ.க.வின் சராசரி இருக்கை வாக்கு 608714 .இதன்படி காங்கிரசுக்கு 175 இருக்கைகள் கிடைத்திருக்கவேண்டும். கிடைத்ததோ ஆக 44!

இது இந்தியத் தேர்தல் வரலாற்றில்இதற்கு முன் என்றும் நடந்திராத நிகழ்வு என Times of India பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மேலும் அது கூறுகையில்
 இந்த இருக்கைகளில் பாதியைக்கூட இதற்கு முந்திய தேர்தல்களில் 31% வாக்குகளைக் கொண்டு எந்தக்கட்சியும் பெற்றதாக தேர்தல் குறிப்புகளில் ஆதாரம் இல்லை என்று ஆணையிடுகின்றது..

மாபெரும் இந்திய ஜனநாயகத்தில்விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மோசடியான தேர்தல் முறை இந்தத் தடவை மோடிக்கு துணைபோயிருக்கின்றது.

இது தான் மோடிப் பாசிசம் ஆட்சி பீடம் ஏறிய யோக்கியம்!

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...