Monday 9 June 2014

``13 இற்கு மேல்`` மாகாணசபைகளுக்கு ``பொலிஸ் அதிகாரம்`` !






போக்குவரத்துக்காவல் துறை அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்குவது குறித்து சிறிலங்கா அரசு யோசனை

[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 07:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

காவல்துறை அதிகாரங்களில்லாமல், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

13வது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது.

13வது திருத்தச்சட்டம் குறித்து அப்போது முழுமையாக ஆராயப்படவும் இல்லை.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

எனினும் வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

காவல்துறை அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்குவதில்லை என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 
எனினும் காவல்துறை அதிகாரத்தில் நிர்வாக முகாமைத்துவத்துக்குத் தேவையான குறிப்பாகப் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

அரசியலமைப்பு என்பது கல்வெட்டல்ல. இந்தியா 157 தடவைகள் தனது அரசியலமைப்பில் திருத்தம் செய்துள்ளது.

சிறிலங்காவின் அரசியலமைப்பும் 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டும், மக்களின் தேவைக்கேற்ப அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு வரையில் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை இருக்கவில்லை.

போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரங்களை ஓரளவு கொடுக்க முடியுமா என்பது பற்றி ஆராயப்படுகிறது.

எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
==============
குறிப்பு: ஆக நடப்பிலுள்ள மாகாண சபைகளுக்கு இந்தளவு அதிகாரமும் இல்லை.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...