Sunday 8 June 2014

அடுத்த தலைவன்.

கோட்டே தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளராக கோத்தாபய?
2014-06-05 22:06:51 | General

அடுத்த கொழும்பு மாவட்டத்தில் கோட்டே தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய கோட்டே தொகுதி அமைப்பாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைப்பாளர் பதவியிலருந்து  ஜனாதிபதி விலக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோத்தாபய ராஜபக்ஷ, கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து, நகர அபிவிருத்தி அமைச்சர் பதவியும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.


ஜனாதிபதி கோரினால் பகிரங்க அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியான பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்தார்.


கோத்தாபய ராஜபக்ஷவை குருணாகல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்மானித்திருந்தார்.  எனினும் குருணாகல் மாவட்டத்திலிருந்து அரசியலுக்கு வருவதை கோத்தாபய விரும்பாததால், ஜனாதிபதி அந்த எண்ணத்தை தற்காலிகமாக கைவிட்டார்.


ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போது விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, திலங்க சுமதிபால ஆகியோர் விலகி செல்லக் கூடும் என்பதால், கொழும்பு மாவட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை கோத்தாபயவிற்கு வழங்கும் நோக்கத்தில் ஜனாதிபதி அவரை கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/jdwr9gbyog6137b8c8c63d4b15922brrqn8856c7872b225e53a6656cxnrcy#sthash.qxjQHfS4.dpuf

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...