Thursday 25 December 2014

ஜனாதிபதி தேர்தல் நீதியான சுதந்திரமான ஒன்றல்ல

ஜனாதிபதி தேர்தல் நீதியான சுதந்திரமான ஒன்றல்ல என்ற முடிவிற்கு வரவேண்டி உள்ளது: 
தேர்தல் முறைமைக் கண்காணிப்பு மையம்- கபே
22 டிசம்பர் 2014
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஜனவரி 8 ம்திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாரியளவில் அரசியல் உரிமைகள் மீறப்படுவது குறித்து கவலைகொண்டுள்ள கபே அமைப்பு இதன் காரணமாக இந்த தேர்தல் நீதியான, சுதந்திரமானவொன்றல்ல என கருதுகின்றது.

ஞாயிற்றுகிழமை அம்பாந்தோட்டையில் எதிர்கட்சி உறுப்பினர்களும், வீதிநாடக கலைஞர்களும் தாக்கப்பட்டவேளை அதனை தடுப்பதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

தேர்தல்கள் என்பது அரசியல் உரிமையின் ஒரு பகுதி,என சுட்டிக்காட்டியுள்ள கபே அமைப்பின் நிறைவேற்று பணி;ப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்,ஓரு நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கான உரிமை மற்றும்,கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்,எதிரணி செயற் பாட்டாளர்களின் நடமாட்ட சுதந்திரம் என்பன மீறப்படுவதாக
சுட்டிக்காட்டி உள்ளார்.வீதி நாடக கலைஞர்கள் பல அரசாங்கங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர், எனினும் அவர்கள் தாக்கப்பட்டது இதுவே முதல்தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிரணி உறுப்பினர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன,இதனால் இந்த தேர்தல் சர்வதேச தராதரத்திலானதாக காணப்படவில்லை, தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று மோசடிகள் நடைபெற்றால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.எனினும் தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் தினங்களில் பாரிய மோசடிகள் இடம் பெறுவதில்லை,அதற்கு முந்தைய தினங்களிலேயே வன்முறைகள் இடம் பெறுகின்றன என்பதை அவரிற்கு நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம், என கபே குறிப்பிட்டுள்ளது.
==========================================

=============================================

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...