Thursday 25 December 2014

மையப் பொழுதுக்குள் மைதிரிக்கு வாக்கிட மனோ கணேசன் உத்தரவு!

மையப் பொழுதுக்குள் மைதிரிக்கு வாக்கிட மனோ கணேசன் உத்தரவு!
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும்.  
வாக்களிக்க தாமதம் வேண்டாம்! மனோ கணேசன்

 COLOMBO MAIL TODAY  6:58 AM  No comments :

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்குகளை அளித்து விட வேண்டும். அன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும் நாம் நேர காலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும் நல்லது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மாத்தளை நகரில் நடைபெற்ற பொது எதிரணி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு:-
இந்த ஆட்சிக் கொடுமையில் இருந்து கொஞ்சமாவது மீண்டு தலை தூக்க வேண்டும். இன்றைய இறுக்கமான சூழலில் இருந்து கொஞ்சமாவது மீள வேண்டும்.

துன்பப்படும் தமிழ் பேசும் மக்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த உண்மைகள் புரியும். இதற்கு இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து இன்றைய ஆளும் கூட்டணியை தோற்கடிப்பதுதான்.

அதனாலேயே பல்வேறு விட்டுக் கொடுப்புகளுடன் இந்த கூட்டணியில் இன்று நாம் இருக்கின்றோம். எங்கள் அரசியல் சமூக வாழ்வில் ஆரம்பித்து, எம் சமூக பொருளாதார வாழ்விலும் கை வைக்க இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
எமது நேர்மையான நியாயமான அரசியல் அபிலாஷகளை பிடுங்கினார்கள். நாம் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு எம் பொருளாதாரத்தில் கை வைத்தார்கள். இப்படியே போனால் நாம், நாளை நாம் வழிபடுவதற்கும் தொழுவதற்கும் பிரார்த்திப்பதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டி வரும்.
எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்று வாதப்பிரதிவாதங்கள் தேவையில்லை. தயக்கங்களுக்கு அவசியம் இல்லை.

எமது வாக்கு முக்கியமானது. அதை பாதுகாப்பாக உரிய இடத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பது அதைவிட முக்கியமானது. இந்த காட்டாட்சியை விரட்ட அதை பயன்படுத்த வேண்டும். எனவேதான் ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் தமது வாக்கை அளிக்க வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களை நான் கோருகிறேன்.

தாமதிக்காதீர்கள். எங்கள் தாமதம், தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு சட்ட விரோத வாய்ப்புகளை தந்து விடலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். – என்றார்.
======================

பொது எதிரணிகளின் உடன்படிக்கையில் தமிழ்மக்களுக்கான தீர்வுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை - மனோ கணேசன்

சிறீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது எதிரணிகளினால் கைக்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் எந்தவொரு விடயங்களும் அதில் உள்ளடக்கப்படவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

விகாரமாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் பொது எதிரணிகள் ஏற்படுத்திக்கொண்ட இந்த உடன்படிக்கை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக்கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது அவர்களின் அபிலாசைகளுக்கு தீர்வை முன்வைக்கும் எத்தவொரு தீர்வையும் இந்த உடன்படிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக இந்த உடன்படிக்கை ஒரு ஜனநாயக அடிப்படைகளே காணப்படுகின்றன.

இன்று நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஒரே தேசிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. நாம் இதில் அங்கம் வகிக்காவிட்டால் நாம் பின்தங்கிவிடுவோம். நாங்கள் எங்களின்அபிலாசைகளை எழுப்பிக்கொண்டு சிங்கள சகோதரர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டிய காலகட்டம். இதன்மூலம் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

அதனாலேயே ஜனநாயக மக்கள் முன்னணி இந்த மேடையில் நிற்கிறது என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

====================
முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்து இட்டுள்ளோம்: மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 10:22.25 AM GMT ]

இன்றைய தினம் இந்த நாட்டிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இங்கு பொது எதிரணியாக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளோம்.

இந்த உடன்படிக்கை இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் அடையாளப்படுத்தவில்லை.

எங்கள் தேசிய அபிலாசைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை. ஆனால், ஒரு ஜனநாயக அடிப்படை இங்கே காணப்படுகிறது. அது எமது எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும் எமது

பயணத்துக்கு வழிசமைக்கும் என நாம் நம்புகின்றோம்.

ஆகவேதான் நம்பிக்கை வைத்து முழுமையில்லாத உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்திட்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற பொது எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடும் வைபவத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மனோ கணேசன் பொது எதிரணி மேடையில் மேலும் கூறியதாவது,

இந்த நாட்டிலே முதன்முறையாக, பிரதான இரண்டு தேசிய கட்சிகளும் ஒரு தேசிய பயணத்தை ஆரம்பித்துள்ளன. இந்த அடிப்படையில் ஒரு பொது வேட்பாளர் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தேசிய பயணத்தில் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். இதில் நாம் இணைந்துகொள்ளா விட்டால் நாம் பின்தங்கி விடுவோம். எமது அபிலாசைகளுக்காக குரல் எழுப்பும் அதேவேளையில், சிங்கள சகோதரர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதன்மூலமாகவே இந்த நாட்டை இன்று ஆண்டுக்கொண்டு இருக்க கூடிய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த கட்டத்தை அடைய முடியும். அந்த அடுத்த கட்டம் பற்றிய தெளிவு படிப்படியாக தெரிய வரும். அந்த எதிர்பார்ப்புடனேயே, ஜனநாயக மக்கள் முன்னணி இன்று இங்கே இந்த மேடையில் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Why are foreign envoys making a beeline to the JVP?

  T he JVP misread the invite as the Indians had acknowledged that the party would be the next government in waiting and Anura Kumara, the p...