Thursday 25 December 2014

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது;மகிந்த

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது;  மகிந்த 
வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளோம், என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ருவான்வெல்லவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய தரப்பினர் கோரிவருவதைப் போன்று வடக்கிலுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட மாட்டாது.

மேலும் படையினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்குமாறும் சில தரப்பினர் கோரி வருகின்றனர். எனவே அவ்வாறான செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது 
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...