Saturday 31 January 2015

போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும்: ஜயந்த தனபால


போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும்: ஜயந்த தனபால 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் ​​​​செயித் ரா´அத் அல் ஹுஸைனை ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் ஜயந்த தனபால சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மூன்றுநாள்  பயணமாக ஜெனீவாவிற்கு விஜயம் செய்திருந்த ஜயந்த தனபால மனித உரிமை பேரவைக் குழு உறுப்பினர்களை சந்தித்து  புதிய ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அமைய ஐ.நா மற்றும் மனித உரிமை பேரவையுடன் இணைந்து செயற்படத்தயார் என அவர் ஐ.நா மனித உரிமையாளர் நாயகத்திடம் எடுத்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இணைந்து செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் 
புதிய அரசு சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் என பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுடாஜரிக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விசாரணைக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் புதிய அரசு  இந்நடவடிக்கையில் ஈடுபடும். புதிய அரசு ,ஐக்கிய நாடுகளுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாகவும்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும் என்றும் தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கையின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளதன் பின்னணியில், இது தொடர்பிலேயே டுடாஜிரிக் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
========================== ``ஊடகச் செய்திகளில் இருந்து...
பிற்குறிப்பு: செய்தியகம்போர்க்குற்றம் தொடர்பான குறிப்பான பிரச்சனையில் மைத்திரி ஆட்சி போர்க்குற்றவாளிகளின் கூட்டரசாங்கமாகும்.பக்ச பாசிச ஆட்சியைக் காட்டிலும், மைத்திரி ஆட்சி இதில் பல படி மேலானதாகும்.பக்ச பாசிசம் தன்னை `குடும்பத்துக்குள்` சுருக்கிக் கொண்டது, மைத்திரி பாசிசம் அனைத்துக் கட்சிகளையும், இந்திய அமெரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு ஆதரவில்,விலைக்கு வாங்கி பாசிச ஆதிக்கத்தின் பரப்பை விரிவாக்கிக் கொண்டுள்ளது.
 ஐ.நா நீதிக்குப் போராடும் தமிழனுக்கு இரும்பு மூக்கு இருக்க வேண்டும்!
==================================================================




No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...