Sunday 8 February 2015

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாருமில்லை - பொலிஸார்

அரசியல் கைதிகள் என்று யாருமில்லை: பொலிஸார்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 04:44.03 PM GMT ]

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாருமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் அரசியல் கைதிகளின் வகையீட்டுக்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள்.

குண்டுகளை வெடிக்கச் செய்தல், மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களே இவர்களாகும்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்படக் கூடிய புலி உறுப்பினர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளில் 50 - 60 வீதம் வரையில் பூர்த்தியாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

==================================================================
மைத்திரி ரணில் பாசிசமே, யுத்தக் கைதிகள் அனைவரும் அரசியல் கைதிகளே!
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!
=================================

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...