Tuesday 22 March 2016

காலச்சுவட்டில் பிரேமா ரேவதியின் தமிழினிக் கட்டுரை!



மேற்காணும் கட்டுரையில் தான் பிரேமா ரேவதியின் கீழ்க் காணும் குறிப்பு உள்ளது,

''புலிகளின் வீரவரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் அந்த காம்பவுண்டுகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.''

இந்த மேற்கோளில் உள்ள `காம்பவுண்டுகளில்` என்கிற தமிழக பேச்சுவழக்குச் சொல், ஈழத்தமிழ் வழக்குக்கு அமைய `இல்லங்களாக` மாற்றப்பட்டு,தமிழினியின் கருத்தாக, `ஒரு கூர் வாளின் நிழலில்` பிரசுரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதற்கு யார் யார் பொறுப்பு?


மேலும் இந்த ஒரு மேற்கோள் மட்டுமல்ல,காலச்சுவடு மார்க்சிய விரோத,ஈழ தேசிய விடுதலை விரோத,விடுதலைப்புலி எதிர்ப்புச் சஞ்சிகை என்பதும்,பிரேமா ரேவதியின் `நலமா தமிழினி`க் கட்டுரையின் தொனியும் அணுகுமுறையும்,காலச்சுவட்டின் நிலைப்பாட்டை அனுசரித்து இருப்பதும், இதற்கமைய `கூர்வாளின் நிழல்` தொகுக்கப்பட்டு அதே காலச்சுவடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருப்பதும்தான் விவகாரம்,வழக்கு,குற்றச்சாட்டு.

சம்பந்தப்பட்டோர் பதிலளிக்க வேண்டும்.

துப்புத் துலங்கிய பின்னால், திருடர்கள் துப்பறிந்தவர்களை  திட்டிவிட்டு கூர்வாளோடு தப்பியோடக் கூடாது!

நியாயம் நிழல் போலத் துரத்தும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
==========================================
பிற்குறிப்பு : மேலும் வாய்ப்புக் கிடைத்தால், பிரேமா ரேவதியின் `சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில்` என்கிற ஈழ சமூக வரையறை குறித்து விரிவான தளத்தில் பேசுவோம். 

23-03-2016

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...