Friday 20 May 2016

அறுமுனைப் போட்டியில் அம்மா ஆட்சியில்!


பதிவான வாக்குகளில்
41% வாக்குகள், 58% தொகுதிகள்
அம்மா ``அமோக`` வெற்றி!

தாண்டவத்தைச் சந்திக்க தயாராகு தமிழகமே!!




தமிழக தேர்தல் வாக்கு விகிதம்: அதிமுகவுக்கு 40.8சதவீத வாக்குகள்; திமுகவுக்கு 31.5 சதவீத வாக்குகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 132 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதிமுக, பதிவான மொத்த வாக்குகளில், சுமார் 40.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இடம் பிடித்துள்ள திமுக 31.5 சதவீத வாக்குகளையும், அதன் கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் 6.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. அடுத்த இடம் பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி 5.3%, பாரதிய ஜனதா கட்சி 2.9%, தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

மதிமுக 0. 9%, இந்திய கம்யூனிஸ்ட் 0.8%, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பூஜ்ஜியம் புள்ளி 0.8% வாக்குகளையும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா  0. 7 % வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 1.3 சதவீத வாக்குகள் கிடைத்திருக்க, சுயேச்சை உள்ளிட்ட மற்ற கட்சிகள் மீதமுள்ள 4.5 சதவீத வாக்குகளைப் பகிர்ந்‌து கொண்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...