Saturday 11 November 2017

வட்டமடு காணி மீட்பு போராட்டம் 9 நாளாக தொடர்கிறது


”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” 
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு  வனபரிபாலன திணைக்களம்  தடை!
----------------------------------------------------------------------------

வட்டமடு காணி மீட்பு போராட்டம் 9 நாளாக தொடர்கிறது

Friday, November 10, 2017

50 வருடகால எமது பூர்வீகக் காணியில் விவசாயம் செய்வதற்கு தடைவிதிக்காதே!

நல்லாட்சி அரசே எமக்கு அநீதி இழைக்காதே!

வட்டமடு விவசாயிகளுக்கு ஏன் இந்த பாரபட்சம்! 

விவசாயக் காணிகளை கபளீகரம் செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய்!

ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே!

என்கிற முழக்கங்கள்  அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனா்.


திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள் இன்று (10) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னா் ஆா்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினா்.
























திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு  பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு விவசாய அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம் இன்று (10) 09 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்த தமது காணிகள், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளினால் விவசாயம் செய்வதற்கு தடுக்கப்பட்டு வருவதனைக் கண்டித்தே இப்பேராட்டத்தை மேற்கொண்டு வருவதாக விவசாய அமைப்புக்களின் தலைவர் ஏ.எம். ஹனீபா தெரிவித்தார்.

நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்காற்றிய ஏழை விவசாயிகளான எங்களின் அவலத்தை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதனையடுத்து பெரும் மனவேதனையும், கவலையும் அடைந்துள்ளோம்.

காணிக்கான அனுமதிப்பத்திரத்துடன் உரமானியம் பெற்று கடந்தகாலங்களில் விவசாயம் செய்து, நீர் வரி செலுத்தி வந்த எங்களுக்கு தற்போது அதிகாரிகள் தடைவிதிப்பது நல்லாட்சியை கேலிக் கூத்தாக்கியுள்ளது.


காணிப் பிரச்சினையை தீர்த்து தருவோம், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வோம் என்று கூறி வாக்குகளைப் பெற்றுச் சென்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று எமது பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்ளாமல் சுகபோகம் அனுபவித்து வருகின்றனர் என்றார்.



50 வருடகால எமது பூர்வீகக் காணியில் விவசாயம் செய்வதற்கு தடைவிதிக்காதே, நல்லாட்சி அரசே எமக்கு அநீதி இளைக்காதே, வட்டமடு விவசாயிகளுக்கு ஏன் இந்த பாரபட்சம், விவசாயக் காணிகளை கபளீகரம் செய்யும் அதிகாரிகளை இடமாற்றம் செய், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா்.

(அம்பாறை சுழற்சி நிருபா் - ரி.கே. ரஹ்மதுல்லா) நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...